உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / படுமோசமான பூசாரி நாயக்கன்பட்டி ரோடு

படுமோசமான பூசாரி நாயக்கன்பட்டி ரோடு

சாத்துார்: சாத்துார் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரி நாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பூசாரி நாயக்கன்பட்டியில் இருந்து சுப்பிரமணியபுரம் வரை உள்ள 5 கி.மீ.ரோடு பிரதமர் கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தில் போடப்பட்டது.ரோடு போடப்பட்டு பல வருடங்கள் ஆவதாலும் வெம்பக்கோட்டையில் இருந்து உடை கல், பட்டாசு மற்றும் கட்டுமானப்பொருட்கள் ஏற்றிச் ெசல்லும் கனரக லாரிகளால் ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்து பல இடங்களில் ரோடு பள்ளமாகவும் மேடாகவும் காணப்படுகிறது. இவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள ரோட்டை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி