உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று பழனிசாமிக்கு வரவேற்பு மான்ராஜ் எம்.எல்.ஏ., அழைப்பு

ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று பழனிசாமிக்கு வரவேற்பு மான்ராஜ் எம்.எல்.ஏ., அழைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., மான்ராஜ் செய்தி குறிப்பு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி இன்று மாலை 5:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியில் நடக்கும் பிரம்மாண்ட கூட்டத்தில் பேசுகிறார். இதனை முன்னிட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் தொகுதி அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவரை வரவேற்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரண்டு வர வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை