உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

காரியாபட்டியில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டியில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் செல்கின்றனர். சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்கள் காரியாபட்டி வந்து பெரியார் சென்று அதற்கு பின் திருப்பரங்குன்றம் செல்ல வேண்டி இருக்கிறது. 3 பஸ்கள் மாற வேண்டி இருப்பதால் நேரம் பணம் விரயமாகிறது. வயதானவர்கள் பலர் பயணம் செய்ய முடியாமல் தயங்கி வருகின்றனர். கார்த்திகை, தைப்பூசம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர் பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பலர் வாடகை வாகனம், டூவீலர்களில் செல்ல நேரிடுகிறது.டூவீலரில் செல்பவர்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர். பஸ் வசதி இருந்தால் எளிதாக சென்று வர முடியும். மேலும் அவனியாபுரம், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எளிதில் சென்று வர முடியும்.இதனை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றம் வழியாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை