உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் இட நெருக்கடியில் தவிக்கும் நோயாளிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் இட நெருக்கடியில் தவிக்கும் நோயாளிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு, ஆண், பெண் வார்டுகளில் கடும் இட நெருக்கடி நிலவுகிறது. இதனை தவிர்க்க கூடுதல் கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் நகரில் பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களும், திருத்தங்கல், ராஜபாளையம், முறம்பு, அழகாபுரி, சுந்தரபாண்டியம் பகுதி மக்களும் அதிகளவில் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இதனால் தினமும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் மையமாக இருப்பதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள ஆண், பெண்கள் வார்டு மிகவும் பழமையான கட்டடத்தில் அமைந்துள்ளதால் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட முடியாத நிலை உள்ளது. மேலும், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு தற்போது ஒரு தகர செட்டில் தான் இயங்குகிறது. இதனால் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும், நோயாளிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, தற்போது மருத்துவமனையில் வெளி நோயாளி பிரிவு, வார்டுகள் வசதிகளுடன் 3 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி