உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பென்னிங்டன் நுாலக விழா

பென்னிங்டன் நுாலக விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் 8வது நிகழ்ச்சியாக காந்தியை போற்றுவோம் என்ற தலைப்பில் இலக்கிய விழா நடந்தது. கமிட்டி தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவி முன்னிலை வகித்தார். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன், காந்தி திருவுருவப்படத்தை திறந்து வைத்து தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குனர் அண்ணாமலை, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பொன் முரளி பேசினர். பொருளாளர் ராஜாராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செயலாளர் ராதா சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி