மேலும் செய்திகள்
மூடுவிழா நடத்தும் ராமதாஸ்!
28-Jul-2025
சாத்துார்:''விளம்பர மாடல் தி.மு.க., அரசு மீது மக்கள் எரிமலை போல் அதிருப்தியில் உள்ளனர்,'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் அவர் கூறியதாவது: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் இருக்கன்குடி ஊராட்சியில் இருந்து பிரித்து 1995 ல் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சசிகலா தலையீட்டால் நத்தத்துபட்டி ஊராட்சியுடன் அரசியல் நிர்வாக குறுக்கீடு காரணமாக இணைக்கப்பட்டுள்ளது. இருக்கன்குடி ஊராட்சியில் கோயிலை மீண்டும் இணைக்க வேண்டும். 2024 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றம் இருக்கன்குடிகோயில் எல்லை குறித்து நேரில் விசாரித்து கலெக்டர் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாவட்ட அமைச்சர்களான தங்கம் தென்னரசு சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோரின் குறுக்கீட்டால் காலதாமதம் செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி இருக்கன்குடி ஊராட்சியுடன் கோயிலை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி செப்.,24ல் கலெக்டர் அலுவலகம் முன் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். 30 நாள் சிறையில் இருந்தால் பிரதமர் உட்பட அமைச்சர்கள் பதவி காலியாகும் என்ற சட்டம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்வதை தடுப்பதற்கான நல்ல சட்டம். இந்த சட்டத்தால் ஊழல் செய்வது குறையும். தமிழகத்தில் தற்போது விளம்பரமாடல் அரசாக தி.மு.க., அரசு உள்ளது. விளம்பரம் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணுகின்றனர். ஆனால் அடித்தட்டு மக்களிடம் எரிமலை போல் அரசுக்கு எதிரான அதிருப்தி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை சட்டசபை தேர்தலோடு நடத்திட வேண்டும். இதனால் தேர்தல் செலவு குறையும். தேர்தல் செலவுகளை குறைக்க நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கருத்து என்றார்.
இருக்கண்குடியில் கிருஷ்ணசாமி கூறுகையில் 'அ.தி.மு.க., கூட்டணி ஜான் பாண்டியனை ஆதரிப்பதாக இருந்தால் நான் விலகி விடுவேன். இரு திராவிட கட்சிகளும் மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கவே விரும்புகின்றன. வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தும் நிற்கலாம்,' என தெரிவித்தார்.
28-Jul-2025