உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குப்பை எரிப்பால் வெளியேறும் புகை மக்கள் அவதி

குப்பை எரிப்பால் வெளியேறும் புகை மக்கள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தொடர்ந்து குப்பையை எரிப்பதால் வெளியேறும் புகையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான 20 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. நகரில் டன் கணக்கில் சேரும் குப்பைகளை சேகரித்து இங்கு வந்து கொட்டுகின்றனர். இங்கு மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்கின்றனர். குப்பையை எரிக்கவோ, மொத்தமாக சேர்த்து வைக்காமல் இருப்பதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைக்கின்றனர். இதிலிருந்து வெளியே வரும் நச்சுப் புகை அருகில் உள்ள சுக்கிலநத்தம், கஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து வெளியேறும் குப்பையால் சுவாச கோளாறு, அலர்ஜி, உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இது குறித்துமக்கள் புகார் செய்தும் நகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகளை தொடர்ந்து எரித்து கொண்டே தான் உள்ளனர். இதனால் மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை