உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தற்காலிக தரைப்பாலத்தை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய மக்கள்

தற்காலிக தரைப்பாலத்தை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய மக்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் பகுதியில் மழை நீர் தேங்கியதால் தற்காலிக தரைபாலத்தை உடைத்து மக்கள் தண்ணீரை வெளியேற்றினர். ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாள் முன்பு பெய்த கனமழையால் ஆறுகள், ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து கண்மாய்கள் பெருகி மறுகால் பாய்ந்தது.இந்நிலையில் தெற்கு வெங்காநல்லுார் பகுதியில் புதிய பாலப்பணிக்காக தற்காலிக தரைப்பாலம் செயல்பாட்டில் இருந்தது. இரண்டு நாள் முன்பு கண்மாய் பெருகி ஓடையில் வெளியேறிய வெள்ளம் தரைப்பாலத்தில் மோதி அருகாமை குடியிருப்புகளில் முழங்கால் வரை சூழ்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கவே வெள்ள பாதிப்புகளை தவிர்க்க வேண்டி வருவாய்த் துறையினருடன் சேர்ந்து கிராமத்தினர் தரைப் பாலத்தை அகற்றி வெள்ளத்தை வெளியேற்றினர். தற்போது தரைப்பாலம் உடைப்பால் மறு கரையில் உள்ளவர்கள் 8 கி.மீ., சுற்ற வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை