உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வளமான எதிர்காலத்தை வசப்படுத்த வைக்குது புத்தகத் திருவிழாவில் குவியும் மக்கள் கருத்து

வளமான எதிர்காலத்தை வசப்படுத்த வைக்குது புத்தகத் திருவிழாவில் குவியும் மக்கள் கருத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 3வது முறையாக நடக்கும் புத்தகத்திருவிழாவில் மக்களின் வருகை அதிகரித்த படியே உள்ளது. புத்தகம் படிப்போம் வித்தகம் படைப்போம் என்ற வாசகங்கள் எழுதாத நுாலகங்களே இல்லை. இன்றுள்ள அதீத அலைபேசி அடிமைக்கு சிறந்த தீர்வு புத்தக வாசிப்பு தான் என்கின்றனர் உளவியலாளர்கள். புத்தகங்கள் வாழ்வதற்கான நோக்கத்தை தருகின்றன. கல்லுாரி முடித்த பின் இலக்கு எதுவுமின்றி சோம்பலாய் சுற்றித்திரியும் இளைஞர்களின் வாழ்க்கையை பல சுய முன்னேற்ற புத்தகங்கள் மாற்றி உள்ளன. படைப்பு தன்மை கொண்ட இளைஞர்களை நாவல்கள், சிறுகதைகள் மெருகேற்றி உள்ளன.விருதுநகர் போன்ற கரிசல் மண்வாசம் கொண்ட ஊருக்குள் ஏராளமான எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் அவர்களை தேடி புத்தகங்களை வாசிக்கின்றனரா என்பது கேள்விக்குறி தான். இது போன்ற சூழல்களை மாற்ற, இளைஞர்களை வாசிப்பை நோக்கி ஊக்குவிக்க புத்தக திருவிழாக்கள் உதவுகின்றன. குவியும் மக்கள், மாணவர்கள் அனைவரும் புத்தகங்கள் தான் வளமான எதிர்காலத்தை வசப்படுத்த வைக்கும் கருவி என்கின்றனர். 110 ஸ்டால்கள் கொண்ட இந்த கண்காட்சி, தினசரி காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. தினசரி பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் உள்ளன. அரங்கு எண் 88ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தி புத்தகங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அங்கு இடம்பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு.

புத்தகங்கள் இலவசம்

ஆன்மிக புத்தகங்கள் விருப்பம்

சண்முகசுந்தரம், விருதுநகர்: ஆன்மிக புத்தகங்கள் என்றால் விருப்பம். ஓய்வை பயனுள்ளதாக போக்க உதவுகின்றன. நான் கல்வி தொடர்பாக நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளேன். இன்னும் எழுத்தை மேம்படுத்த கல்வி தொடர்பான புத்தகங்களையும் வாங்க உள்ளேன்.

குழந்தைகளை மெருகேற்றும்

வி.திவ்யா, விருதுநகர்: எனது குழந்தைக்கு தேவையான நன்னெறி, மாயாஜால கதைகள் தொடர்பான புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். இங்கு நிறைய புத்தகங்கள் உள்ளேன். கெட்டி அட்டை, வண்ணப்படம் நிறைந்துள்ள புத்தகங்கள் என்றால் அவற்றை குழந்தைகள் பத்திரமாக வைத்து படிப்பர். கற்பனை புத்தகங்கள் குழந்தைகளை மெருகேற்றும்.

ஆறு முதல் அறுபது வரை

எம்.பெரியசாமி, விருதுநகர்: பணம் சார் உளவியல் புத்தகத்தை தேடி வந்தேன். ஆங்கில பதிப்பு மட்டுமே உள்ளது. புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. அரங்குகளில் உள்ள புத்தகங்களும் நன்றாக இருக்கின்றன. இவை தவிர ஆறு முதல் அறுபது வரை எல்லோருக்குமான புத்தகங்கள் உள்ளன.

ஒரே இடத்தில் கிடைக்கிறது

என்.வித்யா, அருப்புக்கோட்டை: போட்டி தேர்வுக்கு படிப்பதற்கு தேவையான புத்தகங்களை வாங்கினேன். புத்தக திருவிழா என்பதால் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்க முடிகிறது. குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் நிறைய உள்ளன. சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.

புத்தகங்கள் இலவசம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை