உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடியில் அடிக்கடி மின்தடை மக்கள் அவதி

நரிக்குடியில் அடிக்கடி மின்தடை மக்கள் அவதி

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முழுக்க விவசாயம் சார்ந்துள்ளது. பெரும்பாலும் தோட்ட விவசாயம் நடைபெற்று வருவதால் மின்சாரம் முக்கிய தேவையாக இருக்கிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாவிட்டாலும், சிறு, குறு தொழில்கள் நடைபெறுகின்றன. அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன. மாணவர்கள் படிக்க முடியவில்லை. வணிகர்கள் தொழில் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். மழை, புயல், காற்று என எது நடந்தாலும் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் நீண்ட மின் சப்ளை இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. பெரும்பாலான குக்கிரமங்களுக்கு 2, 3 நாட்கள் ஆனால் கூட மின்சப்ளை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அடிக்கடி மின்தடை செய்வதை தவிர்த்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை