உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏழாயிரம்பண்ணையில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி

ஏழாயிரம்பண்ணையில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி

சாத்துார் : ஏழாயிரம் பண்ணையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஏழாயிரம் பண்ணையில் நாளுக்கு நாள் சாலை ஓரத்தில் புற்றீசல் போல் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. பாஸ்ட் புட் கடைகள் சிக்கன் கடைகள் மட்டுமின்றி இறைச்சிக் கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.சாலை ஓரத்திலேயே கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ரோட்டை ஒட்டி தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல கூட பாதையின்றி தவிக்கும் நிலை உள்ளது. ரோட்டில் செல்லும் கனரக வாகனங்களும் ரோட்டின் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். தற்போது மீண்டும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகி வரும் நிலையில் ஏழாயிரம் பண்ணை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசாரும் திணறும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும், என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி