உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணம் எடுக்க வந்த பெண்ணின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி நகை வாங்கிய நபர்கள்

பணம் எடுக்க வந்த பெண்ணின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி நகை வாங்கிய நபர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கி ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வந்த பெண்ணின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ. 20 ஆயிரம் எடுத்தும், நகை கடையில் ரூ. 50 ஆயிரத்துக்கு நகை வாங்கி சென்ற மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் நல்லகுற்றாலபுரம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி 62. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.இதில் சவுதி அரேபியாவில் ஆடிட்டராக வேலை செய்யும் இரண்டாவது மகன் வேல்முருகனுக்கு, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு உள்ள நிலையில் அவரது ஏ.டி.எம். கார்டை ராஜேஸ்வரி பயன்படுத்தி வந்துள்ளார்.இந்நிலையில்மருத்துவ செலவுக்கு பணம் எடுக்க நேற்று முன் தினம் மாலை 4:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் காம்ப்ளக்சில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டிஎம். மையத்திற்கு பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 2 நபர்களில் ஒருவர் ராஜேஸ்வரியிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி மிஷினில் சொருகியுள்ளார். பின் நம்பரை ராஜேஸ்வரி டைப் செய்துள்ளார். அப்போது வங்கி கணக்கில் ரூ.21 லட்சம் இருப்பதாக ஏ.டி.எம். திரையில் காண்பித்துள்ளது. ஆனால், அங்குள்ள இரண்டு ஏ.டி.எம்.களிலும் பணம் எடுத்த போது பணம் இல்லை என்ற அந்த மர்ம நபர் கூறியதையடுத்து, ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு ராஜேஸ்வரி வீடு திரும்பி விட்டார். இந்நிலையில் தாய் ராஜேஸ்வரியை தொடர்பு கொண்ட மகன் வேல்முருகன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 20 ஆயிரமும், வி.பி.எம். நகைக்கடையில் ரூ. 50 ஆயிரத்துக்கு நகை எடுத்ததாக மெசேஜ் வந்ததாக கூறி விவரம் கேட்டுள்ளார். தான் பணம், நகை எடுக்கவில்லை என ராஜேஸ்வரி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !