உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோண்டாமல் போடும் ரோடால் ஆபத்து பணியை தடுத்து நிறுத்திய மக்கள்

தோண்டாமல் போடும் ரோடால் ஆபத்து பணியை தடுத்து நிறுத்திய மக்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் புதிய ரோடு பணிக்கு தோண்டாமல் போடுவதால் வீடுகள் பள்ளத்தில் செல்வதாக கூறி குடியிருப்பு வாசிகள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.ராஜபாளையம் நகராட்சி 26வது வார்டு துரைசாமிபுரம் காட்டு தெரு அருகே நெசவாளர்கள் குடியிருப்பு உள்ளது. நான்கு வருடங்களுக்கு முன் இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.பணிகள் முடிந்து ஒரு வருடங்களுக்கு மேல் கடந்தும் மெயின் தெருக்களுக்கு மட்டும் புதிய ரோடு பணிகள் நடந்து முடிந்துள்ளது. குறுக்கு சந்துகளில் ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று சிமெண்ட் சாலை அமைப்பதற்காக தொழிலாளர்கள் வந்துள்ளனர்.பிரதான சந்துகளுக்கு மட்டும் பாதை அமைக்கப்படும் எனவும் குறுக்கு சந்துகளில் வேறு ஒப்பந்தக்காரர் மூலம் பாதை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பகுதியாக மாறி அமைக்கும் பட்சத்தில் ரோடு உயர்ந்து வீடுகள் தாழ்ந்து கழிவுநீர் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால் ரோட்டினை தோண்டியோ அல்லது ஒரே நேரத்தில் மொத்தமாக சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் பணிகளை நிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கவுன்சிலர் மாரியப்பன் சமாதானம் செய்தும் வாக்குவாதம் நடந்ததால் தொழிலாளர்கள் பணிகளை நிறுத்திவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி