உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேர்தல் அறிவிப்பால் நிதி ஒதுக்கிய பணிகளை முடக்காமல் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு

தேர்தல் அறிவிப்பால் நிதி ஒதுக்கிய பணிகளை முடக்காமல் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலுவையில் உள்ள ரோடு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் இதை காரணம் காட்டி முடக்காமல் செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ராஜபாளையத்தில் நான்கு வருடங்களாக பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் கூட்டு குழாய் திட்ட பணிகள் தொடங்கி முழுமை பெறாமல் நடந்து வருகிறது. இதற்காக நகர் முழுவதும் தோண்டப்பட்டு முதல் கட்டமாக மெயின் ரோடுகள், அதனை அடுத்த தெருக்கள் மட்டும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.சந்துப் பகுதிகளில் எல்லாம் தற்போது வரை தோண்டப்பட்டு கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இது குறித்து கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் முறையிடும்போது ஒவ்வொரு கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும் என்ற பதில் கிடைத்து வந்தது.இந்நிலையில் ரோடு பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததால் இதை காரணம் காட்டி பணிகளை நிறுத்தி விடுவார்களோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி அதிகாரி: ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்ததாரர்களின் காலதாமதத்தால் உள்ள பணிகளுக்கு எந்த தடையும் இல்லை. புதிதாக பணிகள் ஒதுக்கீடு இருக்காது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி