உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

 போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) சார்பில் அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றினர். தொட்டக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் உதயகுமார், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாவட்ட பொருளாளர் பாண்டியராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை