சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபருக்கு 20 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபர் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் 55. இவர் போட்டோகிராபராக உள்ளார். இவர் 2024 டிசம்பரில் ஒரு சடங்கு வீட்டு நிகழ்ச்சியை வீடியோ மற்றும் போட்டோ எடுக்க சென்றார். அப்போது அங்கு 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ராஜபாளையம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.