உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் 2025 மரக்கன்றுகள் நடவு

சிவகாசியில் 2025 மரக்கன்றுகள் நடவு

சிவகாசி: சிவகாசி பசுமை மன்றம், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் ரோட்டரி கிளப் சிவகாசி டவுன் சார்பில் புத்தாண்டினை முன்னிட்டு பெரியகுளம் கண்மாயின் மேற்கு கரையில் 2025 ஆண்டினை குறிக்கும் வகையில் 2025 மரக்கன்றுகள் நடப்பட்டது. பசுமை மன்றம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறுகையில், 2024ல் ஒரு லட்சம் மரம் என்ற இலக்குடன் ஆரம்பித்து, 86,000 மரக்கன்றுகள் வேண்டுராயாபுரம் மேய்ச்சல் இடம், பெரியகுளம், சிறுகுளம், விளாம்பட்டி ரோடு, செங்குளம் ஆகிய நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பராமரித்து வருகிறோம். இந்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் களம் காண்கிறோம், என்றார். சிவகாசி வர்த்தக சங்கம் தலைவர் ரவி அருணாச்சலம், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டவுன் சேர்மன் சண்முக நடராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை