மேலும் செய்திகள்
கிருமாம்பாக்கம் ஏரியில் மரக்கன்று நடும் விழா
01-Nov-2026
சிவகாசி: சிவகாசி பேர் நாயக்கன்பட்டியில் உள்ள கசடுக்கழிவு மேலாண்மை செயலாக்கம் மைய வளாகத்தில் நகர் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கமிஷனர் மகேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாநகர பொறியாளர் மணிமாறன், மாநகர் நல அலுவலர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தனர். வேம்பு, பூவரசு, புங்கை, மகிழம் உள்ளிட்ட 750 மரக்கன்றுகள் நடப்பட்டது. பொது சுகாதார பிரிவு பணியாளர்கள் துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், டெங்கு தடுப்பு கலப்பு பணியாளர்கள் நட்டனர். ஏற்பாடுகளை சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் செய்தனர்.
01-Nov-2026