மேலும் செய்திகள்
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை
14-Oct-2024
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையினால் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 20 நாளில் 11 அடி உயரத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.அக். 10 முதல் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் செய்து வரும் மழையினால் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.அக். 12 நிலவரப்படி 47.56 அடி உயரம் உள்ள பெரியாறு அணையில் 24.28 அடி உயரத்திற்கு தான் தண்ணீர் இருந்தது. நேற்று காலை நிலவரப்படி தற்போது 35. 21 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதே போல் 42.64 அடி உயரமுள்ள கோவிலாறு அணையில் 24.61 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 29 . 36 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெரியாறு அணை நிரம்பும் நிலையை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
14-Oct-2024