உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் 500 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்மாள், அம்பலவாணர் சுவாமி ஆலயம் சிதிலமடைந்து, புதர் மண்டி கிடந்தது. அருப்புக்கோட்டை அருள்தரும் அகஸ்தியர் பெருமாள் உழவாரப்பணி குழுவினர், முடுக்கன்குளம் கிராமத்தினர், சிவாலய அர்ச்சகர்கள் இணைந்து உழவாரப்பணியை மேற்கொண்டனர்.இவ்வாலயத்தில் தான் மண்டோதரி திருமண வரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்து ராவணனை திருமணம் முடித்ததாக ஐதீகம். இங்குள்ள குளத்திற்கு மண்டோதரி குளம் என்று பெயர் உண்டு. சிவராத்திரி அன்று சூரிய பகவான் அதிகாலை உதயத்தில் சிவலிங்கம் மீது பட்டு கீழிறங்கும் அமைப்பை இத்தலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை