பிளஸ் 2 வேதியியல் தேர்வு: 112 பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மாணவர்கள் 5857, மாணவிகள் 7965 என 13 ஆயிரத்து 822 பேர் விண்ணப்பித்த நிலையில் 5804 மாணவர்கள், 7906 மாணவிகள் என 13 ஆயிரத்து 710 பேர் தேர்வெழுதினர். 112 பேர் ஆப்சென்ட் ஆகினர். கணக்கு பதிவியல் தேர்வில் 7445 மாணவர்களில் 7298 பேர் தேர்வெழுதினர் 147 பேர் ஆப்சென்ட் ஆகினர். புவியியல் தேர்வில் 239 மாணவர்களில் 232 பேர் தேர்வெழுதி 7 பேர் ஆப்சென்ட் ஆகினர்.