உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் வரவேற்றார். முன்னாள் சென்னை மாநகராட்சி உறுப்பினர் மணிவண்ணன் சட்டை பாதுகாப்பு மாநில செயலாளர் யுவராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுத்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல், நகரச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். அமைப்புச் செயலாளர் மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை