உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புது பஸ் ஸ்டாண்ட் முக்கு ரோடு வளைவில் தொடரும் ஆக்கிரமிப்பு போலீசார் நடவடிக்கை எதிர்பார்ப்பு

புது பஸ் ஸ்டாண்ட் முக்கு ரோடு வளைவில் தொடரும் ஆக்கிரமிப்பு போலீசார் நடவடிக்கை எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் டூவீலர்கள், லோடு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு தொடர் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் வாகன நெரிசல் அதிகம். பஞ்சு மார்க்கெட்டில் இருந்து சத்திரப்பட்டி ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட், தென்காசி ரோட்டிற்கு வரும் வாகனங்களும், தென்காசி ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கும், எதிர் புறமாக வரும் கனரக வாகனங்கள், லாரி, பஸ், கார் என அனைத்து வகையான வாகனங்களும் இப்பகுதியில் ஒன்று கூடுவதால் சிக்கல் ஏற்படுகிறது.இப்பகுதியில் செயல்படும் உணவகங்கள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள் என அனைவரும் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர் கார் போன்றவற்றை நிறுத்துவதால் இப்பிரச்சனை தொடர்கிறது.குறிப்பாக புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி ரோட்டிற்கும், சத்திரப்பட்டி ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கான வளைவிலும் லாரி, பஸ், கன்டெய்னர் போன்ற வாகனங்கள் சிரமத்தை சந்திப்பதுடன் அடிக்கடி விபத்துக்கள், உயிர் பலிகள் போன்றவை ஏற்பட்டு வருகிறது.போக்குவரத்து போலீசார் இப்பகுதி சாலையோரங்களில் எல்லை கோடு வரைவது, வாகனங்களை இரண்டு பக்கம் நிறுத்துவதை தடுப்பது, மீறுபவர்களுக்கு அபராதம் போன்ற நடவடிக்கை மூலம் இவற்றை தடுக்க வேண்டுமென விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ