வத்திராயிருப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் நியமனம்
வத்திராயிருப்பு: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வத்திராயிருப்பில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு படுத்த நேற்று முதல் போக்குவரத்து போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இங்கு ரோட்டடி தெரு முதல் முத்தாலம்மன் பஜார், நாடார் பஜார் வழியாக அரசு மருத்துவமனை வரை வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு காலை , மாலை வேலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தி வந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று காலை முதல் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டு, ரோட்டடி தெரு சந்திப்பில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். இவர் தினமும் காலை 8:00 மணி முதல் 11:00 மணி, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பணியில் இருக்க உத்திரவிடப்பட்டுள்ளது.