உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீசாருக்கு லோக்சபா தேர்தல் பணி ஊக்கத்தொகை கிடைக்கவில்லை

போலீசாருக்கு லோக்சபா தேர்தல் பணி ஊக்கத்தொகை கிடைக்கவில்லை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிக்கான ஊக்கத்தொகை போலீசாருக்கு இதுவரை வழங்காததால் விரக்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப். 19ல் நடந்து, ஜூன் 4ல் முடிவுகள் வெளியாகி பதவியேற்பு விழாவும் முடிந்து சில மாதங்களாகி விட்டது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து போலீசாருக்கான தேர்தல் பணிகள் துவங்கியது.தேர்தல் முறைகேடுகள் தடுக்கும் பறக்கும் படைகள், கண்காணிப்புக்குழு, ஓட்டுப்பெட்டிகள், ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு, தேர்தல் புள்ளி விவரங்கள் சேகரித்தல், முக்கியஸ்தர்கள் வருகை என பல்வேறு பணிகளில் மாவட்ட போலீசார் பணிச்சுமைக்கு மத்தியிலும் தொடர் பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் ஊக்கத்தொகை வருவாய்த்துறையினருக்கும், ஆசிரியர்களுக்கும் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால் 4 மாதமாகியும் போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை. தேர்தலின் போது முறையான விடுமுறை, ஸ்டேஷன் பணிக்கு கூட ஆட்கள் இன்றி சிரமத்தில் பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்க தாமதிப்பதால் விரக்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ