உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்/

உண்டியல் உடைப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே புரசலுார் முஷ்டக்குறிச்சி செல்லும் ரோட்டில் வீர மாகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் கருவறை அருகில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.2500 திருடு போனது தெரிந்தது. இரவில் கோயில் அருகே புரசலுார் கிழக்குத் தெருவை சேர்ந்த சங்கரேஸ்வரன் சுற்றி திரிந்ததாக கோயில் நிர்வாகி முத்துராமலிங்கம், ஊர் பெரியவர்கள் புகாரில் பரளச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாநகராட்சி ஊழியர் காயம்

சிவகாசி: நியு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 27. சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இவர், தனது டூவீலரில் வெம்பக்கோட்டை ரோடு காயாம்பு நகர் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது, சசி நகரைச் சேர்ந்த சிவானந்த ஞானவேல் ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார்.

கார் -- டூவீலர் மோதல்: ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் அழகு ராஜா 45. இவர் நேற்று காலை 6:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை) உப்போடை அருகே சென்றார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த செந்தில்குமார் 29, திருத்தங்கலில் இருந்து கமுதி நோக்கி செல்ல காரை ஓட்டி வந்து டூவீலரில் மோதியதில் அழகுராஜா சம்பவயிடத்திலேயே பலியானார்.

தொழிலாளி சாவு

அருப்புக்கோட்டை: நரிக்குடி வேலாயுதபுரம் தச்சு தொழிலாளி முனியாண்டி 64. வேலைக்காக 2 நாட்கள் முன் அருப்புக்கோட்டை வந்தார். நேற்று இரவு இவரதுமகன் மாரியப்பனுக்கு அலைபேசி மூலம் தந்தை முனியாண்டி அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ