உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

இளைஞர் தற்கொலைவிருதுநகர்: அல்லம்பட்டி வீரராமன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் 37, மது குடிப்பதால் இவருக்கும் மனைவி ராமலட்சுமிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ராஜசேகர் ஜன. 1 இரவு 10:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.* சிவகாசி: சிவகாசி ஏ.துலுக்கப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் சதீஷ்குமார் 26. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.கார் மோதி விபத்துவிருதுநகர்: சிவகாசி அருகே ஸ்ரீனிவாச நகரைச் சேர்ந்தவர் ஜெயபாஸ்கர் 55. இவர் டூவீலரில் ஜன. 2 காலை 9:30 மணிக்கு விருதுநகர் - சாத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் காரில் வந்த சூலக்கரை சத்யாநகரைச் சேர்ந்த ஜெயபால் 43, டூவீலரில் மோதியதில் ஜெயபாஸ்கர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் மாயம்விருதுநகர்: யானைக்குழாய் தெருவின் முத்துராமலிங்கநகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ் 25. இவர் ஜன. 30 காலை 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். எங்கு சென்றார் என தெரியவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பறிமுதல்சிவகாசி: சிவகாசி பழைய வெள்ளையாபுரம் தண்டபாணி நகரை சேர்ந்த ராமமூர்த்தி, திருத்தங்கல் சாரதா நகரை சேர்ந்த சேது 67, ஆகியோர் கிச்ச நாயக்கன்பட்டியில் உள்ள ராமமூர்த்திக்கு சொந்தமான கட்டடத்தில் சட்டவிரோதமாக சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். மாரனேரி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.-விபத்து இருவர் காயம்சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் ராமராஜ் 43. ஸ்டோரி கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவர் தனது டூவீலரில் சிவகாசி திருத்தங்கல் ரோட்டில் சென்ற போது சின்னப்பன் நாடார் தெருவை சேர்ந்த இசக்கி ராஜா ஓட்டி வந்த டூவீலர் மோதியது இருவரும் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.--பணம் பறிக்க முயற்சிசிவகாசி: சிவகாசி பாரதி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் 29. இவர் நாரணாபுரம் ரோடு குழந்தை மாரியம்மன் கோயில் அருகே சென்ற போது துாத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார் 31, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தார். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.-டிராக்டர் மோதி பட்டாசு தொழிலாளி பலிசிவகாசி: சிவகாசி ரெங்க சமுத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முனியாண்டி 56. பட்டாசு தொழிலாளியான இவர் தனது டூவீலரில் ஆலங்குளம் ரோட்டில் சென்ற போது துரைச்சாமிபுரம் யாதவர் தெருவை சேர்ந்த சங்கர் கோவில் 24, ஓட்டி வந்த தண்ணீர் டேங்கருடன் கூடிய டிராக்டர் மோதியதில் முனியாண்டி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை