உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பட்டாசு பறிமுதல்சிவகாசி: திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் 40. இவர் மீனம்பட்டியில் அரசு அனுமதி இல்லாமல் தகர செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் பட்டாசு களை பறிமுதல் செய்தனர்.-------இளம் பெண் மாயம்சிவகாசி: ரிசர்வ் லைன் டெய்லர் காலனி சேர்ந்தவர் பிரியா 21. இவருக்கும் மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்த வெயில் முத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பத் தகராறில் பிரியா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு வந்து அங்கிருந்தபடி பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு பிரியா, ஒரு பையனுடன் சென்ற நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளி மாணவி பலிசிவகாசி: நாரணாபுரம் முனியசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் ரம்யா 14. அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் மூச்சு விட சிரமம் ஏற்பட்ட நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பேன்சி பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைதுசாத்துார்: வெம்பக்கோட்டை விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் கோமதி சங்கர், 36. செவல்பட்டி கிளி பயர் ஓர்க்ஸில் விதிமுறைகளை மீறி அங்குள்ள பொது ரூமில் பேன்சிரக பட்டாசுகளை உற்பத்தி செய்தார். ரோந்து சென்ற போலீசார் பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குசாத்துார்: சாத்துார் கீழக்காந்தி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 29. இவர் மனைவி செல்வலட்சுமி, 26. இருவருக்கும் திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இரு பெண் குழந்தைகள் உள்ளன. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து அடித்து உதைத்து சூடு வைத்தார். சாத்துார் போலீசார் மாரிமுத்து மீது வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.--முதியவர் பலிசிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் கோபால் நகரை சேர்ந்தவர் கோபிநாதன் 72. இவர் சைக்கிளில் வெம்பக்கோட்டை ரோட்டில் சென்ற போது ஆத்துார் வடக்கு தெருவை சேர்ந்த சாந்தகுமார் ஓட்டி வந்த லாரி மோதியதில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை