மேலும் செய்திகள்
சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு
11-Apr-2025
சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சாத்துார்: சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி, 23. இவர் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோசாத்துார்: சாத்துார் தாயில் பட்டியை சேர்ந்தவர் மணி, 24.அதே பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை 3 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.விருதுநகர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் 1098 உதவி எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து ஊர் நல அலுவலர் மகாலட்சுமி, 50. விசாரித்தார்.அவரது புகார் படி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து வாலிபரை விசாரித்து வருகின்றனர்.பட்டாசு தயாரித்தவர் கைதுசாத்துார்: தாயில்பட்டி எஸ்.பி. எம். தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 33.வீட்டில் வைத்து குருவி, லட்சுமி வெடி தயாரித்தார்.ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Apr-2025