மேலும் செய்திகள்
561 மதுபாட்டில்கள் பறிமுதல்
03-Oct-2025
பட்டாசு பறிமுதல் சிவகாசி: சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்தவர் ஜானகி 54. இவர் தனது பட்டாசு கடையின் அருகில் உள்ள கட்டடத்தில் அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 35 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். * செங்கமல நாச்சியார்புரம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 73 இவர் மீனம்பட்டியில் உள்ள தனது பட்டாசு கடையின் அருகே உள்ள கட்டடத்தில் அரசு அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.50,000 பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள் பறிமுதல் சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்தவர் முனியம்மா 47. இவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பெண் கைது சாத்துார்: ஏழாயிரம் பண்ணை ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமலட்சுமி ,38 . இவரது பெட்டிக்கடையில் இருந்து 600 மதிப்பிலான புகையிலை பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.
03-Oct-2025