மேலும் செய்திகள்
ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
12-Oct-2025
வாலிபர் பலி சாத்துார் : சாத்துார் ஏ. புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமர், 43.கூலி தொழிலாளி.நேற்று மதியம் 11:30 மணிக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பலியானார். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். முதியவர் மீது போக்சோ சாத்துார் : வெம்பக்கோட்டை அருகே கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி,சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சைல்டு லைனுக்கு புகார் வந்ததை தொடர்ந்து நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி நேரில் விசாரித்தார். இதில் முதியவர் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. சாத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Oct-2025