மேலும் செய்திகள்
ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்
22-Jan-2025
ராஜபாளையம்: போலீஸ் ஸ்டேஷன்களில் மாற்று பணிகளில் ஈடுபடுத்தப்படும் போலீசாரால் வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படுவதால் போலீசார் பணிச்சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கமான ரோந்து பணி, பாரா, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஸ்பெஷல் ரோந்து, குற்றத்தடுப்பு பணிகள் உட்பட பல்வேறு அத்தியாவசிய பணிகள் செயல் முறையில் உள்ளன. ராஜபாளையம் சப் டிவிஷனில் ராஜபாளையம் வடக்கு, தெற்கு, மகளிர், சேத்துார், ஊரகம், தளவாய்புரம், கீழ ராஜகுலராமன், போக்குவரத்து என 9 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.இவற்றில் ஒரு டி.எஸ்.பி., 7 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், 330 போலீசார் உள்ளனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரிவு, தனிப்படை என மாற்றுப் பணியில் உள்ளனர். சமீபத்தில் நீதிமன்ற வளாகம், மருத்துவமனையில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பின் தமிழக அரசு உத்தரவுப்படி ராஜபாளையம் நீதிமன்றத்தில் எஸ்.எஸ்.ஐ., தலைமையில் 5 போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் தலா 5 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இது தவிர நீதிமன்ற வழக்கு விசாரணை, ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல், சட்டம் ஒழுகு பிரச்சனை, வி.ஐ.பி பாதுகாப்பு, திருவிழாக்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பணியில் இதே போலீசாரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.ஏற்கனவே காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இருக்கின்ற போலீசாரும் மாற்றுப் பணி பாதுகாப்பு பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுவதால் வழக்கமான ரோந்து பணி, பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி குற்ற தடுப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஓய்வின்றி பணியாற்றுவதால் போலீசார் பணி நெருக்கடியில் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் நீதிமன்றம் அரசு மருத்துவமனை ஆர்ப்பாட்டங்களுக்கு ஊர்க்காவல் படை, பட்டாலியன் பிரிவினரை பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
22-Jan-2025