உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன், திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டு பூஜை நடந்தது. 11 நாட்கள் விழா நடக்கும். 4, 6 ம் நாள் திருவிழாவில் குத்து விளக்கு பூஜை, 8 ம் நாள் திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும்.சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வீதி உலா, 8ம் நாள் பொங்கல் திருவிழாவும், 9ம் நாள் கயர் குத்து திருவிழாவும், 10ம் நாள் தேரோட்டமும் நடக்கும். இதே போல் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை