உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு ஓரங்களில் பள்ளம் வாகனங்கள் விபத்து அபாயம்

ரோடு ஓரங்களில் பள்ளம் வாகனங்கள் விபத்து அபாயம்

திருச்சுழி: திருச்சூழி அருகே ரெட்டியபட்டி - மீனாட்சிபுரம் ரோடு ஓரங்களில் பள்ளமாக இருப்பதால் ஒதுங்கும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகிறது.திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி உள்ளது. இங்கிருந்து 5 கி.மீ., தூரத்தில் மீனாட்சிபுரம் உள்ளது. இந்த ரோடு வழியாக மீனாட்சிபுரம், மறவர் பெருங்குடி செல்லலாம். தினமும் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும். ரோட்டில் இருபுறமும் உள்ள ஓரங்கள் சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறிவிட்டது.இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு ரோடு ஓரமாக ஒதுங்கும்போது விபத்து ஏற்படுகிறது. மேலும் இரு புறமும் முட்செடிகள் வளர்ந்து இருப்பதால் ஓரத்தில் செல்லும்போது கண்களை பதம் பார்க்கிறது. ரெட்டியபட்டி - மீனாட்சிபுரம் ரோட்டின் இரு புற ஓரங்களை சரி செய்தும், முட்செடிகளை அகற்றவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி