உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கல்

விருதுநகர்; விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 1632 மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் விருது வழங்கப்பட்டது.விழாவிற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். சாத்துார், திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுகளை வழங்கினார். இதில் விருதுநகர் காங்., கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் ராஜா சொக்கர், ரங்கசாமி, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்., செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், விருதுநகர் மேற்கு மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் சுப்புராம், காங்., நகர தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை