உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனுமதியின்றி இயங்கிய நிறுவனத்தில் தடை பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு

அனுமதியின்றி இயங்கிய நிறுவனத்தில் தடை பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி இயங்கிய பாலிபேக் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.சிவகாசியைச் சேர்ந்த கல்யாண் குமாருக்கு பள்ளப்பட்டி ரோட்டில் பாலிபேக் நிறுவனம் உள்ளது. இங்கு கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் பாண்டியராஜன், சுகாதார ஆய்வாளர் முத்துப்பாண்டி, மேற்பார்வையாளர் ஆசிர்வாதம், துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பாலிபேக் நிறுவனம் மாநகராட்சி அனுமதி இன்றி இயங்கியது தெரியவந்தது. மேலும் இங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழும் இல்லாத நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !