உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே இடையன்குளம் ஊராட்சியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யாததால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (நவ.,14) காலை 8:00 மணி முதல் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு தனியார் பஸ்கள் செல்ல முடியாமல் மக்கள் பாதித்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை