அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் : விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பதவி விலகக்கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஆமத்துாரில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் வண்டிப் பாதைகள், குடிநீர் ஆதார நீர்வழி, ஓடைப் பாதைகளை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. அதற்கு உடந்தையாக இருந்த கலெக்டர் ஜெயசீலனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என புகாரளித்தும் அமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், அவர் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் வேல்முருகன், அர்ச்சுனன், கேசவராஜன், ராமச்சந்திர ராஜா, ராமமூர்த்தி உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 48 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.