சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூ : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் மலையடிவாரத்தில் பக்தர்கள் குவியத் துவங்கினர். அதிகாலை 1:00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாத பூஜைகள் நடந்தது. பின்னர் இரவு 2:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் ஆண்டாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்ததால் கோயிலிலும், மாட வீதிகள், ரதவீதிகள் மட்டுமின்றி நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.