உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரங்களின் பெயர் அறிய க்யூ ஆர் கோடு

மரங்களின் பெயர் அறிய க்யூ ஆர் கோடு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் 'க்யூ ஆர் கோடு' கொண்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் மரத்தில் தாவரவியல் பெயர், குடும்பப்பெயர், தமிழ் பெயர், பொதுப் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் 93 வகை மரங்கள், 256 வகை செடிகள் உள்ளது. இதனை கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர்கள் பிரேம் சங்கர், மாரீஸ்வரி கல்லுாரி வெப் போர்டல் மூலம் வடிவமைத்தனர்.இந்த முயற்சியை தாவரவியல் துறைப் பேராசிரியர் பெரிய கருப்பையா, பேராசிரியர்கள் சுரேஷ், மகேந்திர பெருமாள், சிவா, உதவிப்பேராசிரியர் சுரேஷ், பட்டமேற்படிப்பு மாணவர்கள் செய்தனர்.இதில் கல்லுாரித் தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சி ராணி, கல்லுாரிச் செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி