மேலும் செய்திகள்
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
12-Mar-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று மாலை மழை பெய்தது. காலை 9:00 முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.மாலை 5:30 மணிக்கு மேல் எதிர்பாராத விதமாக பலத்த சாரல் மழை பெய்தது.இதனால் மாரியம்மன் கோயில் முன்பு சகதி ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். இதே போல் பஸ் ஸ்டாண்ட், நேதாஜி ரோடு, தேரடி மற்றும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
12-Mar-2025