உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அபாயம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அபாயம்

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் தொடர்ந்து பெய்த கன மழையில் ஓடைகள், கண்மாய்கள் நிறைந்தன. தெருக்களில் உள்ள வாறுகால்களில் குப்பைகளுடன் கழிவுநீர் பிளாஸ்டிக் கழிவுகள் அடித்து வரப்பட்டு அனைத்தும் மழைநீர் வரத்து ஓடையில் சேர்ந்துள்ளன. புளியம்பட்டி விருதுநகர் ரோடு பகுதியில் உள்ள ஓடையில் மழையில் அடித்து வரப்பட்ட, தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்துள்ளன.இவற்றில் மழைநீர் சேரும் போது, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. நகராட்சியினர் பிரதான ஓடைகள், வாறுகால்களில் துப்புரவு பணியை முறையாக செய்வது இல்லை. இதனால் ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீரில் அடித்து வரப்பட்டு குவிந்துள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தாவிடில் பாட்டில்களில் உள்ள மழை நீரில் டெங்கு கொசு உற்பத்தியாகி விடும்.நகராட்சி சுகாதார பிரிவு உடனடியாக இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி