உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சர்வீஸ் ரோட்டில் குளம் போல் தேங்கிய மழைநீர்

 சர்வீஸ் ரோட்டில் குளம் போல் தேங்கிய மழைநீர்

அருப்புக்கோட்டை-: அருப்புக்கோட்டையில் மேம்பாலம் சர்வீஸ் ரோட்டிற்கு கீழ் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் மதுரை --- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை செல்கிறது. இங்குள்ள ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இந்த ரோட்டை பயன்படுத்தி நகருக்குள் செல்ல முடியும். அருப்புக்கோட்டையில் இருந்து எஸ்.பி.கே., கல்லூரி ரோடு வழியாக மதுரைக்கு செல்லக்கூடிய சர்வீஸ் ரோட்டில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறது. ரோட்டின் இருபுறம் வாறுகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற வழி இன்றி குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி செல்லும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். டூவீலர்களில் செல்பவர்கள் தண்ணீரை கடக்க முடியாமல் வாகனம் பழுதாகி விடுகிறது. நெடுஞ்சாலை துறையினர் சர்வீஸ் ரோடு இரு புறத்திலும் வாறுகால் கட்டி ரோட்டில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ