உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் ராஜேந்திரபாலாஜி அழைப்பு

அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் ராஜேந்திரபாலாஜி அழைப்பு

சிவகாசி: ''த.வெ.க., தலைவர் விஜய் தி.மு.க.,வை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அவர் அ.தி.மு.க., கூட்டணிக்கு வரவேண்டும். தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு விஜய் கட்சியை தி.மு.க., அழித்துவிடும்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் 2வது இடத்திற்குதான் போட்டி. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராக ஆட்சியில் அமர்வது உறுதி. அ.தி.மு.க.,வை எதிர்க்கின்ற சக்தி யாருக்கும் கிடையாது. தேர்தல் யுத்த களத்தில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க., கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பாதயாத்திரை செல்வதற்கு வாழ்த்துக்கள். பன்னீர்செல்வம், தினகரன் இணைப்பு சம்பந்தமாக எந்த முடிவாக இருந்தாலும் பழனிசாமிதான் எடுப்பார். விஜயகாந்த் தே.மு.தி.க., துவங்கும் போது மதுரையில் அவருக்கு கூடியது மிகப்பெரிய கூட்டம். அவருக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தனர். ஆனால் விஜய்க்கு பக்குவபட்ட தொண்டர்கள் உருவாகவில்லை. விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடக்காத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். விஜய் தி.மு.க.,வை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க., கூட்டணிக்கு வரவேண்டும். தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு விஜய் கட்சியை தி.மு.க., அழித்துவிடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை