| ADDED : நவ 27, 2025 06:20 AM
சிவகாசி: தவறு செய்த தி.மு.க.,விற்கு 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். திருத்தங்கலில் உள்ள மேற்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தி.மு.க.,வில் கூலிக்கு வேலை செய்கின்றனர். நமது கட்சியில் லட்சியத்திற்காக வேலை செய்கின்றனர். அ.தி.மு.க., கட்சி மட்டும் தான் உழைப்பவர்களுக்கு மரியாதை அளிக்கும். தி.மு.க.,வில் ஒரே குடும்பம் மட்டுமே ஆட்சி நடத்தி வருகிறது. நமது ஆட்சியில் தீட்டப்பட்ட அனைத்து திட்டங்களும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவை. தவறு செய்த தி.மு.க.,விற்கு 2026 சட்டசபை தேர்தல் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். அ.தி.மு.க., வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராவார். இதில் எந்த மாற்றமும் இல்லை, என்றார்.