மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
2 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
2 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
2 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
2 hour(s) ago
காரியாபட்டி: வலுக்கலொட்டியில் நூலகத்தைச் சுற்றி மாட்டுச்சாணம் மற்ற கழிவு பொருட்களை கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் வாசகர்கள் நூலகத்திற்கு வர தயங்குகின்றனர்.காரியாபட்டி வலுக்கலொட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக நூலகம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நூலகத்தைச் சுற்றி அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் மாடுகள் வளர்த்து வருபவர்கள், மாட்டுச் சாணம், கோழிக் கழிவுகள், இதர கழிவுப் பொருட்களை நூலகத்தை சுற்றி கொட்டி வருகின்றனர்.துர்நாற்றம் வீசுவதால் நூலகத்தில் உட்கார்ந்து படிக்க முடியவில்லை என கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ரூ. 3.40 செலவில் கம்பி வேலி அமைக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. உள்ளாட்சி நிர்வாகம் சார்பாக மரக்கன்றுகளை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாடு வளர்ப்போர் கம்பி வேலியை உடைத்து மாட்டுச்சாணம், கோழிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி வருகின்றனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நூலகத்திற்கு வாசகர்கள் வர முடியவில்லை. ஆர்வமுள்ள பலர் வர தயங்குகின்றனர்.மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மூலம் நூலகத்தை சுற்றி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தினர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago