ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு காரியாபட்டியில் மக்கள் அவதி
காரியாபட்டி: காரியாபட்டியில் இரு வாரமாக ரெவென்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். . நகை அடமானம், வாகன கடன், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரெவென்யூ ஸ்டாம்ப் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரியாபட்டி, சுற்று வட்டார பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக போஸ்ட் ஆபீஸில் ரெவென்யூ ஸ்டாம்ப் கேட்டால் ஆர்டர் போட்டிருக்கிறோம் விரைவில் வரும் என்கிறார்கள். 2 வாரங்களாகியும் இதுவரை வரவில்லை. தட்டுப்பாடு நிலவி வருகிறது.ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இது போன்ற தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் தவியாய் தவித்தனர். மீண்டும் அதே நிலைமை தொடர்கிறது. தேவையை அறிந்து ஸ்டாம்ப் இருப்பு வைத்து, தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.