உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவங்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும்வாகன விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 500 ஆக உள்ளது. இதில் இளைஞர்கள் தான் அதிகளவில் உயிரிழக்கின்றனர். 70 சதவீதம் டூவீலர் வாகன விபத்துக்களால் நிகழ்கிறது. மது அருந்துவதின் மூலமாகவும், சாலை விதிகளை பின்பற்றாமலும், வாகனங்களை இயக்கும் பொழுது அவர்களுக்கான ஆபத்தை தேடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள், என்றார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பாக்கியலெட்சுமி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி