மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
காரியாபட்டி: மாவட்டத்தில் கிராமப்புற ரோடுகள், முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகள் என ரோட்டோரங்களில் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதோடு, பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்தில் சிக்கும் அபாயத்தால் அச்சத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது.மாவட்டத்தில், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு உள்ளாட்சி ரோடு போடப்படுகிறது. பெரும்பாலான கிராமப்புற ரோடுகள் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. ரோடுகளில் பராமரிப்பு பணிகள் சரிவர இருப்பது இல்லை. பெரும்பாலான கிராமப்புற, முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.வாகனங்களில் செல்லும் போது உரசி வாகனங்களை சேதப்படுத்துகிறது. ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கண்களில் பட்டு பதம் பார்க்கிறது. வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ரோடுகள் வளைந்து நெளிந்து செல்லும். வளைவுகளில் அடந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பதட்டத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.காற்றடிக்கும் காலங்களில் வாகன ஓட்டிகளின் கண்ணில் பட்டு விபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகிறது. வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களுக்குள் திருடர்கள் மறைந்து தப்பிக்க வழிவகுக்கிறது. பல்வேறு இடர்பாடுகள் இருக்கும் இவ்விஷயத்தில், ரோடு பணி முடிந்தவுடன் கடமை முடிந்து விட்டதாக ஒப்பந்ததாரர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர். போதிய பராமரிப்பு பணிகளை செய்வது கிடையாது. மழை நேரங்களில் அடர்த்தியாக வளரும் சீமைக் கருவேல கிளைகள் ரோட்டவே மறைக்கின்றன.கிராமப்புற ரோடுகளில் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தி வரும் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, வளைவுகளில் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல நெடுஞ்சாலை துறையினர், உள்ளாட்சித் துறையினருடன் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago