உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  புல்லுார் பள்ளியில் இடிந்து விழுந்த கூரை

 புல்லுார் பள்ளியில் இடிந்து விழுந்த கூரை

காரியாபட்டி: காரியாபட்டி புல்லூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டட கூரை இடிந்து விழுந்தது. காரியாபட்டி புல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. எப்போது இடிந்து விழுமோ என்கிற சூழ்நிலையில் மாணவர்கள் படித்து வந்தனர். நேற்று முன்தினம் பெய்த கன மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல், பள்ளி கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன் விழுந்ததால் யாருக்கு காயம் இல்லை. அதேபோல் மந்திரிஓடையில் 15 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு, மழை நீர் கசிவு ஏற்பட்டு கூரை இடிந்து விழுந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இடிந்து விழுந்து, விபத்து ஏற்படுவதற்கு முன், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ